அனைவருக்கும் நீதியை நிலைநாட்டக்கூடிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க கூறுகிறார்

Share Button

அனைவருக்கும் நீதியை நிலைநாட்டக்கூடிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவாட்சியை நீதியான வகையில் நாட்டை மேம்படுத்துபவதற்கு நிர்வாகம் முக்கியமானதாகும். மோசடி, ஊழல், வீண்விரயத்திற்கு அப்பாலான நிர்வாகமொன்றை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். தேசிய ஐக்கியம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பொத்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.

சிலர் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத மோதல்களை ஏற்படுத்துவதற்காகச் செயற்படுகின்றனர். தமது நிர்வாகத்தில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11