பொலிவிய ஜனாதிபதியை பாதுகாக்கும் நடவடிக்கையில் இணையுமாறு ஆளும் கட்சி தமது உறுப்பினர்களுக்கு அழைப்பு

Share Button

பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொராலெஸூக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் அந்நாட்டு பொலிஸார் இணைந்து கொண்டுள்ளனர். இதனால், ஜனாதிபதியை பாதுகாக்க ஆளும் கட்சி, தமது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இலத்தீன் அமெரிக்கா நாடான பொலிவியாவில் நீண்டகாலமாக ஈவோ மொராலெஸ் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், நான்காவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியே ஆர்ப்பாட்டக்கார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அரச ஊடகங்கள் இரண்டை பலாத்காரமான முறையில் கைப்பற்றினர்.

இதேவேளை, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஈவோ மொராலெஸ், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *