புத்தெழுச்சிப் பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் இன்றும் பல அபிவிருத்திப் பணிகள் மக்கள் பாவனைக்கு

Share Button

புத்தெழுச்சிப் பெறும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன. இவை தொடர்பான நிகழ்ச்சிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும்.

பொலன்னறுவை புதிய நகரத்தில் நடைபாதை ஒழுங்கை, அரலகங்வில சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, பொலன்னறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தின் கிரிக்கட் மைதானம், விலயாய ஆரம்ப பாடசாலையின் புதிய கட்டடத் தொகுதி, செவனபிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைத் தொகுதி, கட்டுவன்பில முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் கட்டடத் தொகுதி போன்றவற்றை ஜனாதிபதி திறந்த வைப்பார்.

வெலிக்கந்த சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பணிமனையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியும், மன்னம்பிட்டி நகரில் நிர்மாணிக்கப்பட்ட ஹெல பொஜூன்ஹல தேசிய உணவகத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *