தேசிய ரீதியில் பணியாற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கலை தொடர்பான கொள்கைப் பிரகடனம் ஒன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்படும்

Share Button

தேசிய ரீதியில் பணியாற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கலை தொடர்பான கொள்கைப் பிரகடனம் ஒன்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்படும். இந்த நாட்டிலுள்ள கலைஞர்களின் பொருளாதார நிலை, சமூக மற்றும் கலைத்துறை சார் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு இந்த கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. திரு.சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், இது விடயம் தொடர்பான அனைத்து தரவுகளையும் திரட்டி பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றின் மூலம் நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று திரைப்பட இயக்குனர் மொஹான் நியாஸ் தெரிவித்தார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது திரு.மொஹான் நியாஸ் இதனைக் குறிப்பிட்டார். கலைத்துறையில் கலைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை அகற்றி அவர்களுக்கு தத்தமது துறைகளை விருத்தி செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11