தற்போதைய அரசாங்கம் மக்களுக்கான சுதந்திரத்தை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு உயர்ந்தபட்ச சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி அமைதியாக காணப்படுவதாகவும் அதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
இந்த சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பின்னடையாத வகையிலான தீர்மானத்தை எடுப்பது அவசியம் என்று நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்தார். பாரம்பரிய அரசியல் முடிவுக்கு வருவதை காண்பது அனைவரது இலக்காகும். சஜித் பிரேமதாஸ பௌத்த தலைவர் என்ற ரீதியில் அனைவருக்கும் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவார் எனவும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நம்பிக்கை வெளியிட்டார்.