96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டி இன்று

Share Button

96 ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்.

96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டி இன்று சுகததாச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தால் நடத்தப்படுகின்ற இத்தொடரானது எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதில், 800 வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளதோடு இம்முறை இருபாலாருக்கும் 38 போட்டிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தெற்காசிய, ஆசிய மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்காக சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ அவர்கள் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *