முன்னேறிவரும் ஆசிய அணிகளுக்கிடையிலாக கிரிக்கட் போட்டி இன்று பங்களாதேஷில் ஆரம்பம்.
முன்னேறிவரும் ஆசிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று பங்களாதேஷில் ஆரம்பமாகும். எதிர்வரும் 23ஆம் திகதி வரை இந்தப் போட்டி இடம்பெறும். சரித் அஸலங்க தலைமையிலான இலங்கை முன்னேறிவரும் அணியின் உப தலைவர் கமிந்து மென்டிஸ் ஆவார். இரண்டு பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டி இடம்பெறும். இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஓமான் ஆகிய நாடுகள் ஏ பிரிவின் கீழ் போட்டியிடுகின்றன. பி பிரிவின் கீழ், பங்களாதேஷ், இந்தியா, ஐக்கிய அரபுகள் இராஜ்யம், ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறும்.