கொங்கோ குடியரசில் எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு பாரிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு.
எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு பாரிய வேலைத்திட்டத்தை கொங்கோ குடியரசு ஆரம்பித்துள்ளது. எபோலா வைரஸ் தொடர்ந்தும் உயிர்க் கொல்லி நோயாக கொங்கோவில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த பல வருடங்களாக உலக சுகாதார அமைப்பு பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளது.
இந்த நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான 50 பேருக்கு புதிய மீள்சக்தியூட்டல் வேலைத்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. கொங்கோவில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.