கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவிப்பு

Share Button

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் இருந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமென வெளியாகியுள்ள அறிக்கையை அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்;.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பதாயின்,  வாழ்க்கைச் செலவுக் குழுவின் ஊடாக அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட வேண்டும. அந்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தால்,  அதற்கான தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையே வெளியிடுமென அவர் குறிப்பிட்டார்

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லையென அதிகாரசபையின் பொது முகாமையாளர் எம்.எஸ்.எம்.பௌசர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *