ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share Button

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குச் சீட்டுக்கள் உபகரணங்கள் ஆகியன வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 627 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலெனி லொகு போத்தாகம தெரிவித்துள்ளார். வாக்கெண்ணும் பணிகளுக்காக 67 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் 179 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ள், கல்முனை தேர்தல் தொகுதியில் 74வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களுமாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு நிலையங்களில் 5 இலட்சத்தி 3 ஆயிரத்தி 790 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் தொகுதியில் 94781 பேரும் மூதூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 7ஆயிரத்து 30 பேரும் சேருவில தொகுதியில் 79ஆயிரத்து 303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்படுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.  வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இங்;கு 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்குடா தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 974 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 672 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 94ஆயிரத்து 648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11