புதிய சிந்தனையில் பொருளாதாரத்தை வெற்றிப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என வர்த்தக சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது

Share Button

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய எண்ணக்கருவுடன் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமான பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என இலங்கை வர்த்தக சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் நியமனத்துடன் நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாக பல்வேறு பொருளாதாரப் பிரிவுகளில் சிறந்த பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் பந்துல திஸாநாயக்க எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

சிறு மற்றும் மத்தியதர வர்த்தகக் கைத்தொழிலின் துறையில் உள்ள நிறுவனங்கள் கடந்த காலப்பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு முன்வைக்கும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனால், கைத்தொழில் துறையில் அபிவிருத்தி ஏற்படும் என பந்துல திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு அமைவாக, உள்ளுர் வர்த்தகர்கள் மாத்திரம் அல்லாது, வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் நாட்டில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டார். புதிய தொழில்வாய்ப்புக்கள் இதன் மூலம் ஏற்படுத்தப்படும் என இலங்கை வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் பந்துல திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *