பிச் கடன் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள கூற்றுக்கு இலங்கை மத்திய வங்கி எதிர்ப்பு

Share Button

பிச் கடன் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் தேர்தல் முடிவின் ஊடாக கொள்கையின் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று வெளியிட்ட கூற்றுக்கு இலங்கை மத்திய வங்கி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறு, ஜனாதிபதி பொறுப்பேற்றமை மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நியமனங்கள் காரணமாக சந்தையில் சாதகமான போக்கு காணப்படுகின்றது. இதற்கு முன்றிலும் எதிரான நிலைமையை அந்த நிறுவனம் எடுத்துக் காட்டியிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு செலாவாணி சந்தையும் கடன் மற்றும் பங்குச் சந்தைகளும் தற்போது தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து சாதகமான போக்கை காட்டுகின்றது. தேர்தல் நிறைவடைந்த தினத்திலிருந்து கடந்த நான்கு நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு இணைவாக அதிகரித்து வருகின்றது. அதேபோல அந்நிய செலாவணி சந்தையில் கூடுதலான விலையின் கீழ் அதிகரிப்பு காணப்படுகின்றது. இதன்மூலம் ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற திறைசேரி உண்டியல் ஏலத்தில் அரச பிணைமுறி சந்தையின் ஆரம்ப வீதம் மிகவும் குறைவடைந்து காணப்பட்டது. இரண்டாவது வினைத்திறன் விகிதமும் குறிப்பிடத்தக்க மட்டத்தில் குறைந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைச்சுட்டெண் கடந்த சில தினங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இவ்வாறான சாதகமான சந்தைப் போக்குகளை கருத்திற் கொள்ளாமல் பிச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள கூற்றில் தவறு காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *