இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்

Share Button

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்புக்கு அடுத்தபாடியாக நாட்டைக் கட்டியெழுப்புவதில் கல்வித்துறைக்கு பிரதான இடம் வழங்கியிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்;. இதன மூலம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் தனது கடமைகளை இன்று பிற்பகல் ஆரம்பித்தார்.. இதன்போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார். நாட்டில் உள்ள அதிகளவான பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகள்; 19 ஆவது நூற்றாண்டுக்குரியவைகளாக உள்ளன. இதனால், கல்வித்துறையில் சிக்கல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆழமாக கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று அமைச்சர் குறிப்பிட்டார். கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரணசிங்க உட்பட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நீதிமன்றம் மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிமால் சிறிபால டி சில்வா இன்று பிற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதன்போது இதில் கலந்து கொண்டனர்.

அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பிற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். அமைச்சின் செயலாளர்களான ஜே.ஜே.ரட்னசிறி மற்றும் காமினி செனவிரத்ன ஆகியோர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11