இந்த வருடத்திற்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்பிக்கப்படும்

Share Button

இவ்வருடத்திற்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வருட செலவினங்களுக்கு இது சமர்க்கப்படுகிறது. பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டார். நாட்டின் அபிவிருத்திக்கான தேவையான நிதியை பெற்றுக் கொள்ளும்பொருட்டு அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார். நிரந்தர வருமானமற்ற பொதுமக்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரை ஊக்குவிப்பதற்கும், அரசாங்கத்தின் பங்களிப்புடன் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேபோன்று வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிக் கொள்கையை தயாரிப்பதற்கும் வரிச் சுமையை குறைப்பதற்கும், தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில், தமிழ் ஊடகங்கள் தவறான தகவல்களை முன்னெடுத்துள்ளன. இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நிலையை மாற்றுவதற்காக அரசாங்கம் சரியான தகவல்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் திரு.வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர் மற்றும் உருவப்படங்களுக்கு பதிலாக அரசாங்கத்தின் இலச்சினையை காட்சிப்படுத்துவதற்காக புதிய ஜனாதிபதி மேற்கொண்டமை முன்மாதிரியான விசேட எடுத்துக்காட்டாகும். அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களில் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசாங்கம் தேசிய மற்றும் உள்ளுர் வளங்களை எந்த வகையிலும் வெளிநாடுகளுக்கு வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். அதிக வட்டிக்கு நுண்கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள், அந்த கடனைச் செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு வசதிகள் செய்யப்படும். இதற்குத் தேவையான ஆலோசனைகள் இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11