ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

Share Button

இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒன்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தமது முதல் இனிங்சிற்காக 187 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சிற்காக 120 ஓட்டங்களையும் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சிற்காக 277 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, தமது இரண்டாவது இனிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றிப்பெற 30 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது.

அந்த இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கட்டை இழந்த நிலையில் அடைந்தது.

இதனிடையே, சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஹெமில்டனில் (ர்யஅடைவழn) ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல்நாள் ஆட்டத்தின் போது மழையின் குறுக்கீடு காரணமாக 55 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மழைக் காரணமாக தடைப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் நாளான இன்று தமது முதல் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி ஒரு விக்கட்டை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *