ஊடக சுதந்திரம் முடக்கப்பட மாட்டாதென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன உறுதி

Share Button

தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று பிற்பகல் ஊடகத்துறை அமைச்சில் தமது பணிகளை ஆரம்பித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் பொறுப்பாக்கப்பட்டுள்ள சகல பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாக அவர் இதன்போது தெரிவித்தார். தற்போது அமைச்சுக்களின் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்குள்ள சுதந்திரம் ஒருபோதும் மாற்றப்பட மாட்டாதென இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களையும் நிறைவேற்ற தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சமூக ஊடக பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். அதன் மூலம் சமூக ஊடகங்கள் மூலம் செயற்படுபவர்கள பதிவு செய்யப்படுவார்கள். அத்துடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் போலிப்; பிரசாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரச ஊடக நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான திட்டங்களை முன்னெடுக்கப்படும். அதற்காக உரிய தகைமை கொண்ட நிர்வாக அனுபவம் மிக்க அதிகாரிகளை அந்நிறுவனங்களுக்கு நியமிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கிராமிய அபிவிருத்திகளுக்காக சகல பிரதேச சபைகளுக்கும் 50 இலட்சம் ரூபா நிதி, பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் அபிவிருத்தி செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *