சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது, உள்ளுராட்சி மன்றங்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது, நகர சபை, பிரதேச சபை உள்ளுராட்சி நிறுவனங்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகிறதா? என்பது பற்றி கண்காணிப்பது சுற்றாடல் பொலிசாரின் பொறுப்பாகும். அத்துடன் குப்iயை அகற்றுவது பொலிசாரின் கடமையல்ல. அவை முறையாக அகற்றப்படுகிறதா? என்பது பற்றி கண்காணிப்பதே பொலிசாரின் கடமையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்படவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தேயின் 8வது நினைவு தின நிகழ்வு கண்டி மஹியாவயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *