எரிபொருட்களின் விலை குறைப்பு!

எரிபொருள்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்திருப்பதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Read more

எரிபொருள் விநியோக விலை ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் விலை ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு உரிய பிரிவினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅமைச்சர் காமினி லொக்குகேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனானசந்திப்பில் பிரதமர் உரையாற்றினார். இந்த சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில்நேற்று இடம்பெற்றது. லங்கா ஐஓசி நிறுவன எரிபொருள் நிலையங்களிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனஎரிபொருள் நிலையங்களிலும் விற்கப்படும் எரிபொருள்களின் விலை ஒரே மட்டத்திற்கு கொண்டுவரப்படுவது அவசியம். ஐஒசி நிறுவன எரிபொருள் விநியோக நிலையங்களில் விலை மட்டங்கள்அதிகமாக ருப்பதால் தாம் நஷ்டம் அடைவதாக எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள்தெரிவித்தார்கள்.    

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5