TNA,ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 117 வாக்குகள்!

பாராளுமன்றத்தின் அடிப்படை சம்பிர்தாயங்களை மதிக்காமல், அரசாங்கத்தை புறக்கணித்து இன்றைய தினம் தனியொரு தரப்பு பாராளுமன்ற அமர்வை நடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்றை அமர்வில்

Read more

ஜனாதிபதிக்கு TNA அனுப்பியது ஆதரவு வழங்கும் கடிதம் அல்ல..

 ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றைஏற்படுத்துவதற்கான  என்று எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது. அரசியல் அமைப்பின்நிலையியல் கட்டளைகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு முரணாக சபாநாயகர் செயல்படுவதனால், இன்றைய தினமும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் சமூகமளிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரட்ன, ரவி கருணாநாயக்க, அர்ஜூன ரணதுங்க, மனோகணேசன் மற்றும் ஜயம்பத்தி விக்ரமரட்ன ஆகியோரின் யோசனையொன்றை பாராளுமன்ற உறுப்பினர்பாட்டலி சம்பிக்க ரணவக்க இங்கு சமர்ப்பித்தார். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட ஊழியர் குழாமுக்கான செலவினங்கள், கொடுப்பனவுகளைஇடைநிறுத்தும் யோசனையையே பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்தார். தாம் சட்டரீதியான முறையில் செயலாற்றுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஜனாதிபதிக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு அனுப்பிய கடிதம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கானஆதரவு வழங்கும் கடிதம் அல்ல என்று பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இங்கு தெரிவித்தார்.  

Read more