எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share Button

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனக்கு தெளிவான நோக்கு உள்ளது என்றும் அதனை தான் கொள்கை பிரகடனத்தின் மூலம் மக்களுக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆனந்தா கல்லூரியின் ஏழு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில், கல்லூரியில் இருந்து உருவான முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பௌத்த தத்துவத்தின் அடிப்படையில் கல்லூரியில் கிடைத்த தேசிய உணர்வு தாய் நாட்டை நேசிக்கின்றவர்களை உருவாக்குவதற்கு உதவியதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆனந்தா கல்லூரி எப்போதும் நாட்டை நேசிக்குமாறு மாணவர்களுக்கு போதித்த, பரம்பரை பரம்பரையாக தேசப்பற்றுள்ளவர்களை உருவாக்கிய பாடசாலை என்றும் தேசத்தின் தற்போதைய தலைவர் என்ற வகையில் நாட்டை சிறப்பாக முன்கொண்டு செல்வதற்கு ஆனந்தா கல்லூரியிடம் இருந்து பெற்ற பலம் பெரும் உதவியாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *