20 ஆவது அரசியல் அமைப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க ஏற்பாடுகள்

Share Button

20 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சூரியவௌவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது 19 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மக்களுக்குப் பயனளிக்கும் சரத்துக்களைத் தவிர ஏனைய அனைத்திலும் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முழுமையான புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை அரசாங்கம் எதிர்வரும் காலாண்டிற்கு இடையில் தயாரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலம் சட்ட மா அதிபரின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *