மேலும் ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு தருவிக்கப்படவிருக்கின்றன

Share Button

நாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவிக்கப்படவிருக்கின்றன.

 

இந்தியாவிடமிருந்து ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா ஸெனெக்கா, கொவிஷிட் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவிருக்கின்றன. நேற்று எட்டாயிரத்து 323 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதுபற்றி இந்திய அரசாங்கமும் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

 

இதுவரை, ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 298 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். தடுப்பூசியின் மூலமும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *