நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றி ஜனாதிபதி இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

Share Button

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை பற்றி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், உயர்ஸ்தானிகர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்திப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

உரிய பிரதமரை நியமிக்கக் காரணமாக அமைந்த கடந்த அரசாங்கத்தின் பிரச்சினைகள் பற்றியும், சிக்கலான நிலை பற்றியும் ஜனாதிபதி இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக, தாம் இந்த நியமனத்தை வழங்கியதாகக் கூறினார்.

நாட்டின் அரசியல் யாப்பிற்கு அமைவாகவும், சமாதானத்தை பாதுகாக்கும் வகையிலும் சகல பணிகளும் இடம்பெறுவதாக இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கம் அணிசேரா கொள்கையின் அடிப்படையில், சகல நாடுகளோடும் வலுவான உறவுகளை பேணவிருக்கிறது.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், சகவாழ்வு என்பனவற்றை மேலும் உறுதிப்படுத்தி தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்வது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *