அரசாங்கத்திற்கு அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு! கெஹெலிய ரம்புக்வெல்ல

Share Button

அரசியல் யாப்புக்கு அமைவாகவோ, சட்ட ரீதியிலோ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளார் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி எந்த நெருக்கடியும் கிடையாது. அரசியல் யாப்புக்கு அமைய, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்திற்கு 121க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

தற்போதைய நிலை பற்றி ஐக்கிய தேசியக் கட்சி மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *