மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை!

Share Button

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது பற்றி புதிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி சகல அரசியல் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவிருக்கிறது.

புதிய அரசாங்கத்தி;ன் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் பதவிக்கு மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்காக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்திருந்த யோசனையும் நிராகரிப்பட்டது.

அந்தப் பதவிக்கு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் தமிழ் பாடசாலையை அமைப்பதற்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த யோசனைக்கு புதிய அமைச்சரவை அனுமதி அளித்ததாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *