அரச நிறுவனங்களில் அமைதியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை! ஜனாதிபதி

Share Button

அரச நிறுவனங்களில் மோதல் நிலைகளுக்கு இடமளிக்காது, சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கேட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுப் பெரமுன என்பனவற்றின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

கடந்த தினங்களில் பல அரச நிறுவனங்களில் ஏற்பட்ட சம்பவங்களை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சகல அரச நிறுவனங்களையும் அமைதியாக கொண்டுநடத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தமது நிறுவனத்திற்குள் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன் போது தெரிவித்தனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *