இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அரபு கட்சி ஒன்றும் ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது

Share Button

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அரபு கட்சி ஒன்றும் ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது. இஸ்ரேலில் வசிக்கும் அரபு பலஸ்தீனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் United Arab List என்ற இந்தக் கட்சி புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு எதிராக அமைக்கப்படவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு அரபு கட்சி ஆதரவு வழங்க இருக்கின்றமை முக்கிய அம்சமாகும். புதிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் இஸ்ரேல் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் முதலாவது அரபு பலஸ்தீன கட்சியாக இதனைக் குறிப்பிட முடியும் என்று தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *