மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைத்தார் ஜனாதிபதி!

Share Button

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டன.

இது நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொர-கஹ-கந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் ஒரு கட்டமாகும்.

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனாதிபதி நீர்த்தேக்க திட்டத்தின் வளாகத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

ரஜரட்ட மக்களின் நலன்கருதி ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்ததும்இ துரித மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதுமான இறுதி நீர்ப்பாசன திட்டம் மொர-கஹ- கந்த நீர்த்தேக்கமாகும். இந்தத் திட்டம் 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலுடன் புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

கொங்கீரிட் அணை, மண் அணை, கருங்கற்கள் நிரம்பிய மூன்று அணைகள் ஆகியவற்றுடன் கூடிய இலங்கையின் ஒரேயொரு நீர்த்தேக்கம் இதுவாகும்.

21 ஆம் நூற்றாண்டின் நீர்ப்பாசன அதிசயம் என மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத் திட்டம் வர்ணிக்கப்படுகிறது.

இதன் மொத்த கொள்ளளவு ஆறரை இலட்சம் ஏக்கர் அடியைத் தாண்டுகிறது. இது பராக்கிராம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

இந்தத் நீர்த்தேக்கத்தின் மூலம் 82 ஆயிரம் ஹெக்டெயர் விளைநிலத்திற்கு பாசன வசதிகளை வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வடமத்தியஇ வடமேல்இ கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் இரண்டாயிரம் குளங்களுக்கு நீரை விநியோகிக்கக் கூடியதாக இருக்கும்.

இதன்மூலம் மூன்று மாகாணங்களிலும் மூன்று இலட்சம் ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டுஇ 15 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்மை பயக்கலாம்.

மேலும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு வருடம் தோறும் தேசிய மின்சார வலைப்பின்னலில் 25 மெகா வோட்ஸ் மின்வலு
சேர்க்கப்படுகிறது.

இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்து 545 மில்லியன் ரூபாவுக்கு மேலான எரிபொருள் செலவினத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை மேற்கொண்டு 22 கோடி ரூபாவுக்கு மேலான வருமானத்தையும் ஈட்டலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *