கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

Share Button

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம்திகதி நிறைவடையவுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம்அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாலாயிரத்து 561 பரீட்சை நிலையங்களும்,541 பரீட்சை இணைப்புநிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

இரத்மலானை விசேட தேவையுடையோர்வித்தியாலயம் மற்றும் தங்கல்ல, மாத்தறை, சிலாபம், கொழும்பு மகசீன் சிறைச்சாலை, போன்றவற்றில்விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போராதனை போதனா வைத்தியசாலை, மஹரகமபுற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *