இணையம் ஊடாக வாடிக்கையாளரை அரவனைக்கும் ‘நவலங்கா’

Share Button

வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து கொண்டே நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நுகர்வோர் தமக்குத் தேவையான உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை தமது வீடுகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு வர்த்தகத்துறையில் ‘நவலங்கா சுப்பர் சிட்டி’ எனும் வர்த்தக நாமத்தில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடி வாடிக்கையாளர்களுக்காக இணையத்தளம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று ரத்மலானையிலுள்ள CBSE கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

‘நவலங்கா சுப்பர் சிட்டி’ பல்பொருள் அங்காடியின் தலைவர் எம்.எம்.ஏ.காதர் இணையத்தள சேவையை ஆரம்பித்து வைத்தார்.

நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஏ.சப்ராஸ் காதர் அங்காடியின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

வாடிக்கையாளர்கள் www.navalanka.lk எனும் இணையத்தில் பிரவேசித்து இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *