தற்போதைய நிலையில் கம்போடியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பௌத்த மதத் தொடர்புகள் மிகவும் வலுப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share Button

தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கம்போடியாவின் தலைநகர் நொம்-பென்னில் அமைந்துள்ள றுயவ டுயபெமய Pசநயா முழளழஅயசயஅ விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனதை; தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கம்போடியாவில் கொன்சுலர் ஒருவரையும் இலங்கையில் கம்போடிய கொன்சுலர் ஒருவரையும் நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான தொடர்பினை பொருளாதார, வர்த்தக ரீதியாகவும் வலுவடையச் செய்வதுடன், தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகளிலும் கைகோர்க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கைக்கும் – கம்போடியாவிற்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் கம்போடியாவின் ஓக் தோங் மலையில் அமைந்துள்ள தியான நிலையத்திற்கு (ஆநனவையவழைn உநவெநச ழக ழரம னுழபெ அழரவெயin) இலங்கையின் தேசிய மரமான 10 நாக மரக்கன்றுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று வழங்கி வைத்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *