சிவில் அமைப்புக்களும் தொழிற்சங்க கூட்டணியும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானம்

Share Button

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழில் சங்க கூட்டணிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றன. கிராமங்களுக்கு சென்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டணியின் இணை ஏற்பட்டாளர் சமன் ரட்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 17ஆம் திகதி தாய்நாடு சிறந்த நாடாக மாறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று அங்கு கருத்து வெளியிட்ட சங்கைக்குரிய தம்பர அமில தேரர் குறிப்பிட்டார். அடக்குமுறையாளர்களுக்கு பதிலாக ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி அறிந்த ஒருவரை அரச தலைவராக தெரிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *